விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனவர் தான் அர்ச்சனா. அதன்பின்பு அடுத்த சீசனில் பங்கு பற்றி ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக அருண் காணப்படுகின்றார். இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளேயே தங்களுடைய ரிலேஷன்ஷிப்பை உறுதிப்படுத்தினார்கள்.
இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அர்ச்சனாவும் அருணும் பல போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், அவர்களுடைய குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்த நிலையிலேயே, அர்ச்சனா - அருண் மற்றும் இவர்களுடைய பெற்றோர்களுடன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி வழங்கி உள்ளார்கள். அதில் அவர்கள் கூறிய விடயங்கள் வைரலாகி வருகின்றன.
அதன்படி அர்ச்சனா கூறுகையில், ஆரம்பத்தில் அருண் பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்கும் போது நானும் இன்னொரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். இந்த இரண்டு சீரியலுக்கும் இடையில் உள்ள தூரம் ஒரு கிலோமீட்டர் தான். அதனால் இரண்டு பேரும் லஞ்ச் டைம் ப்ரேக்கில் சந்திப்போம்.
இதன் போது யாருமே நம்மளை பார்க்கவில்லை, யாரும் நம்மளை கவனிக்கவில்லை என்ற எண்ணத்தில் இரண்டு பேரும் ஜாலியாக இருந்தோம். ஆனால் அதற்குப் பிறகு தான் தெரிந்தது நாங்கள் இரண்டு பேரும் சந்திப்பது எங்களைத் தவிர எங்களை சுற்றியுள்ள அத்தனை பேருக்கும் தெரியும் என்று.
இதன்போது அங்கிருந்த சீரியல் டைரக்டரும் அர்ச்சனா, அருண் காதலிப்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இவர்கள் ஒவ்வொரு முறையும் லஞ்ச் பிரேக் டைமில் ஏன் லேட்டானது என்று கேட்டால் அர்ச்சனா தனது பாட்டி இறந்ததாக பல பாட்டிகளை கொன்று விடுவார். அதேபோல அருண் சின்ன பிள்ளைகள் சொல்லும் ரீசனை போலவே கார் பஞ்சர் ஆயிற்று என்று சொல்லுவார். ஆனாலும் எங்களுக்கு என்ன நடந்தது என்று உண்மை தெரியும்.
அருண் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு அர்ச்சனா மிகவும் உடைந்தே விட்டார். ஒருநாள் அவர் போன் பண்ணி தனக்கு மிகவும் முடியாமல் இருப்பதாக சொன்னார். அதன் பின்பு உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்தோம்.
அதன் போதும் அவருக்கு ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார் என்று சீரியல் டைரக்டர் இவர்களுடைய காதல் கதையை பற்றி பேசியுள்ளார்..
Listen News!