அஜித் குமார் நடிப்பில் பெப்ரவரி ஆறாம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றது. இதனால் இந்த படம் முதல் நாளிலேயே 40 கோடி ரூபாய் வசூலிக்கும் என நம்பப்படுகின்றது.
இந்த நிலையில், நடிகை திரிஷாவின் ஹாஷ்டேக் எக்ஸ் தலத்தில் திடீரென டிரெண்டாகி வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் விடாமுயற்சி படமும் அஜித் குமாரும் தான். இது தொடர்பில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன.
இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு பெரிய பெரிய படங்கள் வரிசை கட்டி காணப்படுகின்றன. இவர் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்துள்ளார். மேலும் கமலஹாசன், சிம்பு நடிப்பில் தயாராகி வரும் தக்லைப் திரைப்படமும் திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
இவ்வாறான நிலையிலே விடாமுயற்சி படத்தில் இருந்து தற்போது வெளியான புகைப்படத்தில் அஜித்தும் திரிஷாவும் மிகவும் இளமையாக காணப்படுகின்றார்கள். இதனாலையே குறித்த புகைப்படங்களுடன் திரிஷாவின் ஹாஷ்டேக் ஃட்ரெண்ட் ஆகி வருகின்றது.
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை அன்று அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் எல்லாமே ஹவுஸ்புல்லாக மாறி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!