2006 ம் ஆண்டு நடிகர் ஜீவா நடித்த "ஈ " படத்தில் துணை நடிகராக நடித்தவரே தினேஷ். இந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்த இயக்குநர்கள் அதற்கு பிறகு தினேஷிற்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பினை கொடுத்திருந்தனர். அந்தவகையில் அவரது நடிப்பில் முதல் முறையாக வெளியான திரைபடமே அட்டக்கத்தி.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜே , விசாரணை , திருடன் போலீஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாது சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுக் கொண்டது.
அத்துடன் இந்தப் படம் வெளியானதால் இயக்குநர்கள் அனைவரும் அதிகளவு வசூலை பெற்றுக் கொண்டனர். இதனால் நடிகர் தினேசும் இனி நடிக்கிற படங்களில் அதிகளவு சம்பளத்தை பெறப்போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
குறிப்பாக லப்பர் பந்து திரைப்படம் அமோக வெற்றியை அளித்தமையே இதற்கு காரணம். அத்துடன் இனி நடிக்கின்ற எல்லாப் படங்களிலும் 8 கோடி சம்பளம் தந்தால் தான் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். இது படத் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்ற வகையில் அமைந்துள்ளது.
Listen News!