• Jan 19 2025

2k கிட்ஸ நம்புங்க அவங்கள பார்க்க எனக்கு பாவமா இருக்கு! சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி !

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

2k கிட்ஸ் 90s கிட்ஸ் என்ற பிரச்னை இன்றளவிலும் பரபரப்பாக நடைபெறுகின்றது. அதை மெருகூட்டும் விதமாக பல சினிமா திரைப்படங்களும் இந்த பிரச்சனைகளையும் இவர்களது வாழக்கை முறையை பிரித்து காட்டுவதாகவும் பல திரைப்படங்களை எடுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் இதை நகைச்சுவையாக கலாய்க்கும் விதத்தில் பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.


90s ,2k என அனைத்து ஹிட்ஸ்களும் விரும்பக்கூடிய பல பாடல்கள் , திரைப்படங்கள் என வழங்க கூடியவர் விஜய் ஆண்டனி. அதிலும் குறிப்பாக இவரது குத்துபாட்டுகளுக்கென்றே இன்றளவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையிலேயே இவர் அடுத்ததாக நடிக்கும் ரோமியோ திரைப்படத்தின் பிரொமோஷனுக்காக ஒரு யூடியூப்  தளம் மொன்றில் பேர்ட்டி கொடுத்துள்ளார்.


மலையாள நடிகை மிருணாளினியுடன் விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் திரைப்படம் ரோமியோ ஆகும். குறித்த பட பிரொமோஷனின் போது வந்திருந்த ரசிகர்களை 2k கிட்ஸ் , 90s கிட்ஸ் என இரண்டாக பிரித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தார். அவ்வாறே அவர் கூறுகையில் " 2k பாவம் அவர்கள் நாங்கள் நினைப்பது போன்று இல்லை ஒரு சிலர்தான் அப்படி அவர்கள் சொல்லுவதை நம்புங்கள் நம்பிக்கைதான் வாழ்க்கை " என மிகவும் நகைச்சுவையாக கூறியுள்ளார்  

Advertisement

Advertisement