• Jan 19 2025

அஜித் சார் தான் பண்ண சொன்னாரு அதாலதான் பண்ணேன்! உண்மையை உடைத்த நடிகர் சக்தி!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையின் மூலம் மட்டுமே சினிமாவுக்குள் நுழைந்து இன்று தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் அஜித்குமார் ஆவார். இவர் நடிப்பு மட்டும் இன்றி பைக் ரெய்டு , கார் ரேஸ்கல் என பல விடயங்களில் ஆர்வம் காட்ட கூடியவர். இவர் பல அறிமுக நடிகர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர். அவ்வாறே நடிகர் சக்திக்கும் சில அறிவுரை வழங்கி உள்ளார்.


90s காலகட்டங்களில் பல பெண்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்தவர் சக்தி ஆவார். இவர் சின்னத்தம்பி , மன்னன் , சந்தூரமுகி என பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசுவின் மகனும் ஆவார். சக்தி பல படங்களில் நடித்திருந்தாலும் " அரபு  நாடே " என்ற பாடலின் மூலமே பெரிதும் பேசப்பட்டார். 


இவ்வாறு இருந்த இவர் சமீபத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தவிக்கின்றார் எனலாம். அவ்வாறே சமீபத்தில் இவர் கொடுத்த ஒரு இன்டெர்வியுவில் கலந்துரையாடும் போது நடிகர் அஜித் பற்றி சில வார்த்தைகள் கூறியுள்ளார். அவ்வாறு அவர் கூறுகையில்" டப்பிங் காக சென்றபோது நான் அஜித் சேரை சந்தித்தேன் அவர் பல விடயங்களை கூறினார் அவ்வாறே நான் வெய்ட் போட்டிருப்பதை பார்த்து விட்டு ஹீரோவாக இருக்க வேண்டும் என்றால் வெய்ட் இருக்க கூடாது என்றார். அதையே நான் போலோவ் செய்கிறேன்" என கூறியுள்ளார் சக்தி.      

Advertisement

Advertisement