• Jul 27 2024

விஜய் பட நாயகியை கொத்திட்டு வர சொன்ன அஜித்.. ‘கோட்’ நடிகையுடன் ஆதிக் பேச்சுவார்த்தை..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் நாயகியை ’குட் பேட் அட்லி’ படத்தின் நாயகியாக்க அஜித் பரிந்துரை செய்ததாகவும் இதனை அடுத்து அந்த நடிகையிடம் ஆதிக் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக நடிப்பவர் நடிகை மீனாட்சி சவுத்ரி. மற்ற நடிகைகளை விட இவருக்கு இந்த படத்தையும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் இவரது கேரக்டர் படம் முழுவதும் வரும் வகையில் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரி நடிப்பு மற்றும் பின்னணியை கேள்விப்பட்ட நடிகர் அஜித், தான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தும்படி ஆதிக் ரவிச்சந்திரன் இடம் அஜித் பரிந்துரை செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து மீனாட்சி சவுத்ரியை நேரில் சந்தித்த ஆதிக் ரவிச்சந்திரன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகவும் அவரும் இந்த படத்தில் நடிக்க அவரும் ஒப்புக்கொண்டதாகவும் அடுத்ததாக கால்ஷீட் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

எனவே ’கோட்’ படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி, அஜித்தின் ’குட் பேட் அக்லி’ படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement