• Mar 29 2025

பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளது யார்..? தயாரிப்பாளர் வெளிநாட்டவரா ..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சேது ,நந்தா , அவன் -இவன்,பிதாமகன் ,பரதேசி  என இவரது இயக்கத்தில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும் ஜெதார்த்தமானதாகவும் காணப்படும் அந்த வரிசையில் வணங்கானும் இடம்பெறுள்ளது.

இந்நிலையில் தற்போது வணங்கான் பட thank meet இல் பாலா தனது அடுத்த படம் குறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.குறித்த நிகழ்வில் அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கமால் நழுவிய பாலா தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளதாக அவர் தரப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.


மற்றும் இவர் தனது அடுத்த படத்திற்கு தயாரிப்பாளரை அமெரிக்காவில் இருந்து தெரிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த nri ஒன்று தயாரிக்கவுள்ளதாகவும் பாலாவிற்கு இப் படத்திற்கு 8 கோடி சம்பளம் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலும் பாலாவினுடைய இரண்டாவது படமான நந்தா பட தயாரிப்பாளரான அமெரிக்காவை சேர்ந்த Aparajeeth Films இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement