• Feb 07 2026

ஆரம்பமும் முடிவும் ஒன்றா..? சற்றுமுன் வெளியாகிய தளபதி 69 அப்டேட் ..! சோகத்தில் ரசிகர்கள்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

h.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் ,பூஜா ஹெட்ஜ் , பாபி தியோல் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் விஜயின் 69 படமாகிய தளபதி 69 படத்தின் பெர்ஸ்ட் லுக் வருகின்ற 26 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் தற்போது இப் படத்திற்கு "நாளைய தீர்ப்பு " என பெயர் வைத்துள்ளதாக ஒரு சில செய்திகள் கசிந்துள்ளன.விஜய் அறிமுகமாகிய முதலாவது படத்தின் பெயரை இப் படத்திற்கு வைத்திருப்பதால் இதுவே இறுதி படமாக இருக்கலாம் என நினைத்து தளபதி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.


இப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் சார்ந்ததாக படத்தின் தலைப்பை தெரிவு செய்யுமாறு இயக்குநருக்கு விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் "பாஸ் " என படத்தின் பெயரை வைக்க தீர்மானித்து பின்னர் இத் தலைப்பினை சிவகார்த்திகேயன் படத்திற்கு தெரிவு செய்துள்ளமையினால் H வினோத் "நாளைய தீர்ப்பு " என வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement