• Aug 21 2025

ஆல்யா மானசாவுக்கு திடீரென என்னாச்சு? பாக்கவே கஷ்டமா இருக்கே..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த சீரியலில் இவர்கள் அது காம்போ மிகவும் அழகாக இருந்தது. ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார்கள். அது மட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங் இல் முதல் இடத்தை பெற்றுக் கொடுத்தது. இதனால் புகழின் உச்சியில் காணப்பட்டார்கள்.

இதை தொடர்ந்து ஆல்யா மானசாவும் சஞ்சீவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் தான் இவர்கள் புதிதாக வீடு கட்டி அதில் குடி புகுந்தார்கள்.


சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடிக்க அதே சேனலில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆலியா மானசாவின் கணவரான சஞ்சிவ்  ஹீரோவாக நடிக்கின்றார்.

இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசாவின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதால் கையில் கட்டுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றார்கள். அத்துடன் அவர் விரைவில் குணமாக வேண்டும் எனவும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement