தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தான் அசோக் செல்வன். தற்போது இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரைப்படங்கள் பெருமளவில் வெற்றி பெறுகின்றன.
சமீபத்தில் வெளியான போர், ப்ளூ ஸ்டார் ஆகிய படங்கள் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தன.
நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் தான் நமக்கு தொழில் ரொமான்ஸ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே நடிகர் ஆர்யாவால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தின் டைட்டில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அசோக் செல்வன் பங்கேற்காத நிலையில், நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷனல்களில் பங்கேற்பதை தயாரிப்பாளர் சங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று திருமலை பேசியுள்ளார்.
அதாவது நமக்குத் தொழில் ரொமான்ஸ் தான் என்ற படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்க , இதனை திருமலை தயாரித்துள்ளார்.
மேலும் அசோக்செல்வனும் ஒரு படத்தை தயாரித்து உள்ளதாகவும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் அவருக்கு தெரிந்த போதிலும், தயாரிப்பாளர்களை அவர் அலைக்கழிப்பதாகவும் திருமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் 31 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த அசோக் செல்வன் தற்போது இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகவும் அசோக் செல்வன் பற்றி திருமலை பேசியுள்ளார்.
அத்துடன் எந்த ஒரு நடிகரும், நடிகையும் இயக்குனரோ தயாரிப்பாளரோ இல்லாவிட்டால் முன்னுக்கு வர முடியாது எனக் குறிப்பிட்ட திருமலை, அதை கவனத்தில் கொண்டு செயல்பட்டவர்கள் மட்டுமே வெற்றியை பெற்றதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு குறித்த படத்திற்கு ஆர்.கே செல்வமணி உள்ளிட்ட ஜாம்பவான்கள் இசை வெளியீட்டுக்காக தங்களது நேரத்தை செலவிட்டு வந்த நிலையில், படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் வராமல் இருப்பது குறித்து திருமலை கேள்வி எழுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!