• Apr 02 2025

ஈஸ்வரி வீட்டில் தடபுடலாய் நடக்கும் ஏற்பாடு.. மாலினியை தேடிச் சென்ற செழியன்! புதிய திருப்பத்தில் பாக்கியலட்சுமி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம். 

அதில், பாக்கியாவிடம் ராதிகா, உங்க லைப்ல செழியனுக்கு நடந்த சம்பவம் போல நடந்து இருக்கு ஆனா, இப்போ ஜெனிக்கு சப்போர்ட் பண்ணாமல் ஏன் செழியனுக்கு  சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என்பது போல கேட்கிறார்.

அதற்கு பாக்கியா, நான் ஜெனிக்கு தான் ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் சப்போர்ட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா இந்த முறை ஜெனிட அப்பா செஞ்சது தப்பு. என்ட வாழ்க்கைல நடந்தது நம்பிக்கை துரோகம். டிவோசுக்கு கோபி அப்ளை பண்ணிவிட்டார். ஒன்று பண்ண முடியாம தான் அதுக்கு ஒப்புக்கொண்டேன்.

ஆனால் ஜெனி செழியன் வாழ்க்கை அப்படி இல்ல. அவங்க ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். போராடி தான் கல்யாணம் பண்ணினவங்க. நான் ஜெனி எடுக்கும் முடிவுக்கு தான் சாதகமா இருப்பன் என ராதிகாவுக்கு புரிய வைக்கிறார்.


மறுபக்கம் கல்யாண புரோக்கரை வீட்டிற்கு அழைத்த ஈஸ்வரி, செழியனுக்கு பொண்ணு பார்க்குமாறு கூறுகிறார். இதன்போது பாக்கியா வந்து பேசவும் பிறகு பேசுவோம் என சொல்லித் தடுக்கிறார்.

அதன் பின் செழியன் எவ்வளவு சொல்லியும் ஈஸ்வரி கேட்காத காரணத்தினால், காரை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே கிளம்புகிறார்.

ரோட்டில் செழியனின் கார் வேகமாக போவதை பார்த்த எழில், பாக்கியாவுக்கு போன் பண்ண, பாக்கியா வீட்டில் நடந்தவற்றை சொல்கிறார். அதன்பின் எழில் செழியனை பின் தொடர்ந்து செல்கிறார்.

இதன்போது மாலினி வீட்டிற்கு சென்ற செழியன், நான் உன்கிட்ட எனக்கு  கல்யாணம் ஆகல என சொன்னனா? நீதானே துரத்தி துரத்தி வந்த? எத்தன தடவ இந்த ப்ராஜெக்ட் வேண்டாம் என சொன்னான் என மாலினிக்கு  திட்டுகிறார் . இதனை வெளியில் இருந்து எழில் கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement