நடிகர் அஜித் இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் வருகின்ற டிசம்பர் மாதம் முடிவடைய வேண்டும் என அஜித் கூறியுள்ளார்.

கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் பல சவாலான போட்டிகளில் கலந்து இருக்கிறார். இதற்காக அவரது போர்சி கார் தயாராகி இருக்கிறது. அந்தக் காரின் முன்னால் அவர் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது.

அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடக்கவுள்ள ஜிடி4 சாம்பியன்ஷிப்பிலும் அஜித் தனது குழு உடன் பங்கு பெற இருக்கிறார். சமீபகாலமாகவே அஜித் நிறைய கார்களை வாங்கி குவித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரது மனைவி பிறந்த நாளுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார்.

இந்த சூழலில் உயரக கார்களில் ஒன்றான போர்சி காரை இப்போது ரேசுக்கு பயன்படுத்த இருக்கிறார். அஜித்தின் இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
AK 🏎️ pic.twitter.com/RnsCmJXkdV
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 27, 2024
Listen News!