• Mar 23 2025

மீண்டும் தொடர்ந்த அன்ஷிதா -விஷால் உறவு..! வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி வீடியோ

Mathumitha / 23 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8 இல் அதிகம் வெளியில் விமர்சிக்கப்பட்டு வந்த ஜோடி ஒன்று அன்ஷிதா -விஷால் மற்றும் தர்ஷிகா -விஷால் அதாவது தர்ஷிகாவிற்கு விஷால் மீது காதல் விஷாலிற்கு அன்ஷிதா மீது காதல் என பல விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் போட்டி முடிவடைந்ததும் அனைவரும் கேங்காக சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து வந்தனர்.


அந்த வகையில் சமீபத்தில் ஷோபா கேங் முத்துகுமரனின் ஊர் திருவிழாவில் கலந்து மகிழ்ந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது. அது போல தற்போது சத்யா ,ஜெப்பிரி ,அன்ஷிதா ,விஷால் ஆகிய நான்கு பேரினதும் நட்பு வீட்டிற்குள் மிகவும் அழகாக இருந்தது.


இந்த நிலையில் இன்று சத்யா தனது பிறந்தநாள் கொண்டாடத்திற்காக இவர்களை தனது வீட்டிற்குள் அழைத்துள்ளார். இதன் போது அனைவரும் சேர்ந்து அவரிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்திற்கு விஷால் மற்றும் அன்ஷிதா சேர்ந்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றும் சத்யா வீட்டிலும் இவர்கள் இருவரும் சேர்ந்தே திரிந்துள்ளனர். மற்றும் இதன் போது எடுத்த வீடியோ ஒன்றினை அன்ஷிதா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement