• Mar 23 2025

"FIRE " பட நடிகைக்கு வந்த அதிஷ்டம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்....

Mathumitha / 20 hours ago

Advertisement

Listen News!

ரச்சிதா மகாலட்சுமி அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி சீரியலில் சூப்பராக நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.இவர் இந்த சீரியலின் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் சீரியல்களிலும் நடித்து வந்தார்.இறுதியாக விஜய் டிவியின் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மிகவும் அருமையாக விளையாடி வெளியேறினார். 


அதன் பின் முழு நீள படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.இதன் ஆரம்பமாக கன்னட படம் ஒன்றில்  நடித்தவர் தற்போது தமிழில் வெளியாகிய ஃபயர் என்ற திரைப்படத்தில் நடித்து பேமஸ் ஆனார். இந்த படத்தில் இவர் அதிக ரொமான்ஸ் காட்சிகளில் சற்று கிளாமராக நடித்தது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.


இந்த நிலையில் இவர் ஃபயர் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். ஸ்ரீகாவ்யா மூவீஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதில் கலந்துகொண்டனர். இந்த படத்தின் பூஜை நிகழ்வில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப் பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement