• Jan 19 2025

’அன்பே வா’ சீரியல் ஹீரோவுக்கு திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா? திருமண தேதி இதுதான்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

'அன்பே வா’ சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகருக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரது திருமண தேதி மற்றும் மணமகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’அன்பே வா’ என்பதும் இந்த சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த நிலையில் நான்கு ஆண்டுகளாக விறுவிறுப்பாக 1000 எபிசோடுக்கும் அதிகமாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த சீரியலில் டெல்னா டேவிஸ் , விராத், நான்சி உள்ளிட்டோர் இந்த சீரியலில் நடித்து வரும் நிலையில் இந்த சீரியலில் ஹீரோவான விராத்துக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாள் அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணப்பெண்ணின் பெயர் நவீனா என்றும் அவர் ஒரு மேக்கப் கலைஞர் என்றும் மேக்கப் தொழில் மூலம் அவர் நிறைய சம்பாதிப்பதாகவும் தெரிகிறது.

இந்த திருமணம் காதல் திருமணமா? அல்லது குடும்பத்தினர் பார்த்து நடத்தும் திருமணமா? என்பது தெரியவில்லை என்றாலும் திருமணம் பத்திரிகை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’அன்பே வா’ சீரியல் விராத் ஏற்கனவே ’அபியும் நானும்’’கண்ணான கண்ணே’ ’பேரழகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement