• Apr 25 2026

தங்கமயிலுக்கு கொடுத்த முத்தம்.. சரவணனுக்கு ரொமான்ஸ் கூட வருமா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று மீனா தனது அலுவலகத்தில் தன்னை திட்டியதாக புலம்பும் காட்சிகளும் , தங்க மயிலுடன் சரவணன் ரொமான்ஸுடன் இருக்கும் காட்சிகளும், அதன் பிறகு ராஜி, கதிர் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று நிச்சயதார்த்தத்துக்கு சேலை எடுத்து கொண்டு அனைவரும் வீடு திரும்பினர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ஆபீசுக்கு லீவு போட்டதால் தன்னை திட்டினார்கள் என்றும் என்னை இந்த வீட்டில் உள்ள யாருமே புரிந்து கொள்ளவில்லை என்றும் மீனா தன்னுடைய கணவர் செந்திலிடம் புலம்பி வருகிறார். இதற்கு செந்தில் இனிமேல் இதுபோன்று வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற வழியாக மீனா சமாதானம் அடைகிறார்.



அதன் பிறகு சரவணன் தனது கனவில் தங்கமயில் வருவதை பார்த்து அவருடன் ரொமான்ஸ் உடன் பேசும் காட்சிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் இந்த அழகான பளிங்கு கன்னத்தில் நான் முத்தம் கொடுக்கலாமா? என்று கேட்க முதலில் வெட்கப்படும் தங்கமயில் அதன் பிறகு முத்தத்திற்கு அனுமதிக்கிறார். சரவணன் முத்தம் கொடுத்த போகும் போது தான் திடீரென கனவில் இருந்து எழுந்து பக்கத்தில் படுத்து இருந்த மாமாவுக்கு முத்தம் கொடுத்து இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைகிறார்.

இந்த நிலையில் கதிர் மிகவும் டயர்டாக வேலைக்கு சென்று விட்டு வரும் நிலையில் அவருக்கு ராஜி சாப்பாடு கொடுக்கும் காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து அவர் மொட்டை மாடிக்கு படுத்து தூங்க போக, தலையணை கூட இல்லாமல் படுத்திருக்கும் கதிருக்கு தலையணை கொண்டு வந்து கொடுத்துவிட்டு போர்வையையும் போர்த்தி விடுகிறார் ராஜி.

இதனை அடுத்து மறுநாள் இன்றைக்கு என்ன கோலம் போடலாம் என மீனா மற்றும் ராஜி ஆலோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் ’தங்கமயில் தான் வீட்டிற்கு வரப் போகிறார்களே அல்லவா, அதனால் மயில் கோலம் போடலாம்’என்று மீனா சொல்ல இருவரும் கேலியுடன் சிரிக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு வந்துள்ளது.

Advertisement

Advertisement