இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டமாக நடந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் அகில இந்திய அளவில் பாஜக கிட்டத்தட்ட 300 தொகுதிகளில் முன்னணியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பதும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு சில இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் போட்டியிட்டார் என்பதும் அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வந்துள்ள தகவலின்படி, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் முன்னிலையில் இருப்பதாகவும் நடிகை ராதிகா பின்னடைவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே ரீதியில் முன்னிலை சென்றால் விஜய பிரபாகரன் மிக எளிதில் வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்றம் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராதிகா சரத்குமார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நேற்று சரத்குமார் விருதுநகர் அம்மன் கோவிலுக்கு சென்று அங்கப் பிரதட்சணம் செய்த நிலையில் அவர் பின்னடைவில் இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!