• Jan 19 2025

ஜீ தமிழில் விலகிய கையோடு விஜய் டிவிக்கு தாவிய சீரியல் நடிகை! வெளியான தகவல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படும் சீரியல் தான் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இந்த வாரத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது. இதை தொடர்ந்து கார்த்திகை தீபத்தின் இரண்டாவது பாகம் தொடர்பிலான புதிய ப்ரோமோ  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் விஜய் டிவி சீரியல்கள் சன் டிவி சீரியல்களுக்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகிறன.

d_i_a

2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகனாக கார்த்திக் நடித்து வருகின்றார். இந்த சீரியல் சுமார் 2 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களின் ஆதரவுடன் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தைப் பெற்று பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது.


இதை தொடர்ந்து இந்த சீரியல் இந்த வாரத்துடன் முடிவடையுள்ள நிலையில் இதன் இரண்டாவது சீசன் ப்ரோமோ வெளியானது. இந்த முறை கார்த்திகை தீபம் சீரியலின் இரண்டாவது சீசன் கிராமத்து கதை களத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் ஹீரோயினாக வைஷ்ணவி கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட நடிகை கார்த்திகா விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க  கமிட்டாகி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement