தமிழ் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தும் அஜித் குமார், நடிகராக மட்டுமின்றி, ஒரு ஆளுமைசாலியான ரேஸர் (Racer) ஆகவும் தனது திறமையை நிரூபித்து வருகின்றார். தற்போது அவர் எடுத்துள்ள ஒரு முக்கியமான தீர்மானம் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமிதப்படுத்தியுள்ளது.
அவரது தனிப்பட்ட ரேஸிங் காரில், "தமிழ் சினிமா"வை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில், தமிழ் சினிமாவின் சின்னமாக விளங்கும் லோகோவை பதித்துள்ளார். இது, ஒரு நடிகர் தமிழ் சினிமாவுக்கு அளிக்கும் முக்கியமான கௌரவமாகும்.
நடிகர் அஜித் குமார், வெறும் நடிகர் அல்ல. மோட்டார் ஸ்போர்ட்ஸில் சர்வதேச ரேஸராக திகழும் ஒருவர். Formula 2 போன்ற பல காம்பிடிஷன்களில் பங்கேற்று, இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அவர் தற்போது சர்வதேச அளவில் நடைபெறும் ரேஸிங் சீசனில் பங்கேற்கும் போது, தன் காரில் தமிழ் சினிமா லோகோவை பிரத்யேகமாக பதித்து பங்கெடுக்க உள்ளதாக கூறியுள்ளார். தற்போது அந்த லோகோவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
Listen News!