கரூர் சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின் போது கூட்ட நெரிசல் சிக்கி சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன் பின்பு இது தொடர்பில் விஜய்க்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன.
அரசியல் ரீதியாக மட்டுமின்றி சினிமா துறையை சார்ந்தவர்களும் விஜயை சரமாரியாக பேசியிருந்தனர். நடிகை ஓவியா கூட விஜயை கைது செய்ய வேண்டும் என குரல் எழுப்பி இருந்தார் . த்ரிஷாவும் தனது கருத்தை முன் வைத்தார்.
இவ்வாறான நிலையில் சென்னையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகை த்ரிஷாவின் வீடு, ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் தங்களுடைய விசாரணையை ஆரம்பித்தனர். மிரட்டல் விடுத்த மர்ம நபர்களையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சோதனையின் இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!