• Nov 26 2025

12 பேரை வாழ வைத்த அஜித்குமார்.. சத்தம் இல்லாமல் செய்த உதவி அம்பலம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. ஆனால் அதில்  குட் பேட் அக்லி படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.  

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார் அஜித். இதனால் அஜித்தின் 64வது படத்தை அவரே இயக்க உள்ளதாகவும் தகவல்கள் அறிவிக்கப்பட்டது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித்  ஆகியோர் காணப்படுகின்றனர்.  எனினும்  அஜித் தனக்கென ரசிகர் கூட்டம் வேண்டாம் என்று மன்றங்களையும் கலைத்தார்.  அவர் செய்யும் நல்ல உதவிகளும் வெளியில் வருவதில்லை. 


இந்த நிலையில், அஜித்குமார்  செய்த நல்ல விஷயம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கடந்த 2012 ஆம் ஆண்டு கேளம்பாக்கம் கண்டிகை பகுதியில் தனது வீட்டில் வேலைப்பார்த்த சமையல்காரர், டிரைவர், தோட்டக்காரர்கள் என மொத்தமாக 12 பேருக்கு தனித் தனியாக வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 

சுமார் 1500 சதுர அடியில் வரிசையாக அந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதிக்கு அஜித் அவென்யூ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளன. 

Advertisement

Advertisement