• Nov 04 2025

"கைதி" மலாய் ரீமேக்கைப் பார்க்க மலேசியா சென்ற கார்த்தி... வைரலான போட்டோஸ்.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளிவந்து, ரசிகர்கள் மற்றும்  விமர்சகர்களால் பெரும் பாராட்டைப் பெற்ற கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "கைதி". தனது கதைக்களம், திரைக்கதை மற்றும் அதிரடி திருப்பங்கள் மூலம் வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் மலாய் ரீமேக் தயாராகி, “BANDUAN” என்ற பெயரில் வெளிவர உள்ளது.


மலேசியாவில் சிறப்புத் திரையிடலுடன் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கவரவுள்ள BANDUAN, நவம்பர் 6 ஆம் தேதி தேசிய திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நடிகர் கார்த்தி நேரடியாக மலேசியா சென்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம், கார்த்தியின் திறமையான நடிப்பு மற்றும் கதை அமைப்பின் தனித்துவத்தால் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. காவல் துறை, சட்டம் மற்றும் பொதுத்துறையில் நடக்கும் சிக்கல்களை சினிமா முறைமையில் வலியுறுத்திய கைதி, திரில்லர் வகையில் தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை உருவாக்கியது.


இந்நிலையில் தற்பொழுது உருவாகியுள்ள ரீமேக் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக கார்த்தி நேரடியாக மலேசியா சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் நேரடியாக பேச உள்ளார் எனக் கூறப்படுகிறது. அத்துடன் கார்த்திக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கவுள்ளதாகவும் சிலர் கருதுகின்றனர். 

Advertisement

Advertisement