• Nov 26 2025

அஜித் சேரும் நானும் ரொம்ப நெருங்கிட்டோம், அவர் நல்ல நண்பர் ஆகிட்டாரு- யாஷிகா ஆனந்த் சொன்ன சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.

படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறியதோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாகவும் இருந்து வருகின்றார்.இந்த நிலையில் யாஷிகா அஜித்தின் மச்சினனும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷி என்பவருடன் இணைந்து சில நொடிகள் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.


இப்படம் வருகின்ற 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய யாஷிகா ஆனந்த், "நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி. இந்த படத்திலும் மாடல் அழகியாக தான் நடித்து இருக்கிறேன். அதனால் நடிப்பதற்கு எளிமையாக இருக்கிறது".

"துருவங்கள் பதினாறு படம் தான் என்னுடைய முதல் படம். திரில்லர் திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதனால் 'சில நொடிகளில்' படத்தில் விரும்பி நடித்தேன். இந்த படத்தில் ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார். மேலும் இதன் மூலம் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன்" என்று யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.     

Advertisement

Advertisement