• Feb 21 2025

தனது யுனிக்கான புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.! கிளாமர் அள்ளுதே..!!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் காணப்படுகின்றார். இவர் அட்டக்கத்தி படத்தின் மூலம் சிறந்த கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கி இருந்தார்.

இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ரம்மி திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும் பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக காக்கா முட்டை திரைப்படம் அமைந்தது.

தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

d_i_a

சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவதிலும்  ஆர்வம் கொண்ட ஒருவராக காணப்படுகின்றார். சமீபத்தில் இவர் சற்று கவர்ச்சியாக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.


இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை களம் இறக்கி உள்ளார். அதில்   'எப்போதும்  நாம் தனித்துவமானவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.'.' என்பதை கேப்ஷனாக போட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது குறித்த புகைப்படங்களுக்கு இணைய வாசிகள் மற்றும் ரசிகர்கள் லைக்களையும் தமது விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement