பிரபல நடிகை நித்யா மேனன் தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டில் "சினிமா தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை அதிலிருந்து விலக முடிவெடுத்தேன்" என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
சமீபத்தில் தேசிய விருது வென்ற நடிகை நித்யா மேனன் பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன் தனது சிறப்பான நடிப்பினால் ஏராளமான ரசிகர்கள் தன வசம் வைத்துள்ளார். தற்போது இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் கலந்து கொண்ட இவர் தனது சினிமா வாழ்க்கை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் " சிறு வயதில் இருந்தே டான்ஸ் ஆடு, பாட்டுப் பாடு, கேமரா முன்பாக வந்து நடி என தன்னை தனது அம்மா தான் புஷ் செய்வார். ஆனால், சினிமா என்றாலே எனக்கு சுத்தமாக பிடிக்காது. சமீபத்தில், போதும் சினிமாவை விட்டு வேறு ஏதாவது பண்றேன். எனக்கு இது பிடிக்கவில்லை என்றே பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்மான்னு சொல்லிட்டாங்க. அந்தளவுக்கு போன நிலையில், திடீரென கடவுள் கொடுத்த லஞ்சம் தான் என்னை மீண்டும் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது எனப் பேசியுள்ளார்.
மேலும் "சினிமாவை விட்டு முழுவதும் விலகி விடலாம் 15 வருடங்கள் நடித்துவிட்டோம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த விருது கிடைத்த நிலையில் தான் நம்மை சினிமா விடாது என்றும் கடவுள் நமக்குத் தரும் லஞ்சம் இது என நினைத்துக் கொண்டேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார் நித்யா மேனன்.
Listen News!