48 வருடங்களாக தனது ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும் இந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், தற்போது 70 வயதை கடந்தும் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.
கோலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கையை வரலாற்றை படமாக எடுப்பதில் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அதன்படி பாரதி, காமராஜர், ஜெயலலிதா சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கூட வரலாற்று படமாக எடுக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பிரபல இயக்குநர் சங்கர் சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக்கை எடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக காணப்படுகிறது.
சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்திற்கான பட ப்ரோமோஷன் மற்றும் பேட்டிகளில் சங்கர் பங்கேற்று வருகின்றார்.
இதன் போது ஏதாவது பயோபிக் எடுக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கா என்று கேட்கப்பட்டது. அதற்கு இல்லை.. இதுவரையில் அந்த மாதிரியான ஐடியா எதுவும் வரவில்லை. ஆனால் அப்படி பயோபிக் எடுப்பதாக இருந்தால் கட்டாயம் ரஜினிகாந்தின் பயோபிக்கை தன எடுப்பேன் என்று பதில் அளித்துள்ளார் ஷங்கர்.
இயக்குநர் ஷங்கர் வழங்கிய இந்த தகவல் இணையதள பக்கங்களில் வைரலாகி உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் மற்றும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!