• Sep 13 2024

நடிகைகளுக்கு பேரிடியாக மாறிய AI தொழில்நுட்பம்..! ராஷ்மிகாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை நடிகைகளை அசிங்கப்படுத்துவற்காக சமீபத்தில் பயன்படுத்தும் விஷயம் தான் டீப்ஃபேக். இதன்மூலம் வேறொருவரின் உடலில் நடிகையின் முகத்தை வைத்து டீப்ஃபேக் செய்து அந்த வீடியோவை சில இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதனால் அந்த நடிகர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. 

இவ்வாறான நிலையில், அப்படியொரு சம்பவம் நடிகை ராஷ்மிகாவிற்கு நடந்ததை நாம் அறிவோம். தற்போது ராஷ்மிகா தொடர்ந்து  மற்றுமொரு நடிகையான கத்ரீனா கைஃபின் சிக்கியுள்ளார். அவரது போலி வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், டீப்ஃபேக் மூலம் நடிகைகளை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முகம் சுழிக்க வைக்கும் வகையில் வீடியோக்களை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இது டீப்ஃபேக் தான் என கண்டுபிடித்த ரசிகர்களும், நட்சத்திரங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். 


அதன்படி, தற்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் டிரெண்டிங்கில் உள்ளது . இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து ரியலானது போல் உருவாக்க முடியும்.

அண்மையில், தமன்னாவின் பாடலொன்றுக்கு சிம்ரன் ஆடியது போல எடிட் செய்து வீடியோ ஒன்றை வைரலாக்கி இருந்தனர். அது பலராலும் ரசிக்கப்பட்டது.

அதேவேளையில், சிலர் இதை தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் ஆபாச வீடியோவில்  மார்பிங் செய்த பின் அது நிஜமாகவே ராஷ்மிகா போல இருந்ததால் பலரும் அதை நம்பிவிட்டனர்.இது ராஷ்மிகாவுக்கு தெரியவர அவர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.


இந்த நிலையில், இன்று நடிகை கத்ரீனா கைஃப் இந்த போலி வீடியோ சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் நடித்த டைகர் 3 படத்தில் டவல் அணிந்து ஒரு சீனில் நடித்துள்ளார். அந்த சீனை AI மூலம் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் சிலர் பரப்பி விட்டுள்ளனர். தற்போது அதுவும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதேவேளை, இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டும் விதமாக இனி போலி வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement