• Jan 18 2025

Bigg Boss 7 - ஆறாவது வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் தயார்! இம்முறை பூர்ணிமா அசிங்கப்படுவது உறுதி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இவ்வாறான நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் யார் யாரை நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது  வெற்றிகரமாக 6-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி தனது தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு கூட கிடைக்காமல் வெளியேற்றப்பட்டார். 

இந்த சம்பவத்தின் பின் பிக்பாஸ் வீட்டிற்குள் மேலும் மோதல்கள் வலுத்தது. இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள குறைவான மதிப்பு உள்ள போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்க மாயாவிடம் கூறியதை தொடர்ந்து அவர், டாஸ்க்கில் ரவீனா, விசித்ரா, கூல் சுரேஷ், அர்ச்சனா, மணி, தினேஷ் ஆகியோரை மாயா தேர்வு செய்தார். 


இதையடுத்து, இந்த ஆறு போட்டியாளர்களும் ஒரு வாரத்திற்கு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

அதன்படி, இந்த வாரம் முழுவதும், ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பல்வேறு பணிகளிலும், சவால்களிலும் பங்கேற்று தங்களுக்கான புள்ளிகளைப் பெற பெற்றால் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்கு திரும்ப முடியும்.

அதே நேரத்தில்இ 6-வது நாமினேஷன் தொடங்கியுள்ளது. கண்ஷப்ஷன் அறையில் வைத்து, அர்ச்சனா உள்ளிட்ட ஸ்மால் பாஸ் டீம் அக்ஷயா மற்றும் சரவணாவை நாமினேட் செய்ய, விசித்ரா,  மாயா மற்றும் அக்‌ஷயாவை நாமினேட் செய்தார். ஐஷு, பூர்ணிமா மற்றும் ஆர்ஜே பிராவோ ஆகியோரையும், கூல் சுரேஷ் மணியை நாமினேட் செய்தனர்.பிக் பாஸ் குழுவிற்குள், மாயா அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோரையும், பூர்ணிமா அர்ச்சனா மற்றும் விசித்ராவையும் நாமினேட் செய்தனர்.


இதை தொடர்ந்து, அர்ச்சனா,விசித்ரா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, பூர்ணிமா மற்றும் ஐஷு ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி, இந்த வாரம் நாமினேஷனில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், பிராவோ, பூர்ணிமா, ஐஷு ஆகியோர்கள் கடுமையாக சிக்கி உள்ளனர். இவர்களில் பூர்ணிமா மற்றும் ஐஷு இருவரில் ஒருவரை கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென ரசிகர்கள் உறுதியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement