• Feb 22 2025

பிரமாண்ட படைப்புடன் மக்களை கவரவரும் அகத்தியா! - 32 கோடி பட்ஜெட்டில் மெகா ஹிட்!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா, தனது புதிய திரைப்படத்தால் மீண்டும் பேசப்படும் நிலைக்கு வந்திருக்கிறார். முன்பு, 2011-ல் வெளியான கோ திரைப்படத்தில் நடித்து அந்தப் படம் ரூ.20 கோடி வரை வசூல் செய்ததை தொடர்ந்து பெரும் புகழைப் பெற்றார். தற்போது, அவரது புதிய படம் ஆதித்யா மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது ஜீவா, இயக்குநர் பா. விஜய்யுடன் இணைந்து ஆதித்யா என்ற பிரம்மாண்டமான படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் சரித்திர அடிப்படையிலானதாக உருவாக்கப்படுவதோடு, பாகுபலி போன்ற மாபெரும் வெற்றி பெறும் என படக்குழு நம்பிக்கையுடன் இருக்கிறது.


படத்தின் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் மிக உயர்ந்ததாக அமைந்ததுடன் படக்குழு இதற்காக ரூ.32 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அளவிலான பட்ஜெட்டில் உருவாகும் ஜீவாவின் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த திரைப்படம் தமிழின் செம்மையான வரலாற்றை திரையில் கொண்டுவரும் வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும் படக்குழுவினர், "இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய திருப்புமுனையாக  இருக்கும் என்றதுடன் அதில் ஜீவாவின் நடிப்பு, பிரம்மாண்டமான காட்சிகள் என்பன பார்வையாளர்களைமகிழ்விக்கும்" என்றனர்.

ஜீவாவின் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை பற்றிய விவரங்களை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஜீவா மீண்டும் ஒரு மெகா ஹிட் கொடுக்கப் போகிறார்" என்று பலரும் கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement