• Jan 19 2025

மீண்டும் மாலினியை நினைவூட்டிய ஜெனி! அதிர்ச்சியில் செழியன்! பழனியை தேடி சென்ற பாக்கியா

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், கிச்சனில் எல்லாரும் இருக்க, மீண்டும் ராதிகா வாந்தி எடுக்கிறார். செல்வி என்ன இது புள்ளதாச்சு பொம்புள போல வாந்தி எடுக்கிறா என்று சொல்ல, பாக்கியா பாக்கிறார். அதன்பின் ஈஸ்வரி வந்து யாரு வாந்தி எடுத்த என்று கேட்க, நீயா என்று அமிர்தாவிடம் கேட்க, இல்லை ராதிகா என்று சொல்ல, ராதிகா ஒருமாதிரி சமாளித்து விட்டு செல்கிறார்.

அதன்பின் கோபி வர இன்னும் ராதிகாவுக்கு சரியாகல நான் கசாயம் வைத்து தாரேன் என சொல்லி பாக்கியாவிடம் தண்ணி வைக்க சொல்ல, அவர் எனக்கு வேலை இருக்கு என்று மறுக்கிறார்.


இதையடுத்து கிச்சனில் போய் ஈஸ்வரி ஒன்று ஒன்றாக கேட்க, உங்க பையன் சும்மா தான் இருக்கார் அவரை கூப்பிட்டு கேளுங்க என பதிலடி கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து ஜெனி குழந்தைக்கு பெயர் வைக்க செழியனிடம் பெயரை கேட்க, அவர் சொன்ன பெயர் ஒன்றும் அவருக்கு பிடிக்கவில்லை, இறுதியாக ஜெனி மாலினி பெயர் வைப்பமா என்று கேட்க, செழியன் அதிர்ச்சி அடைகிறார். அத்துடன், பாக்கியாவும் இதை பற்றி பேச வீட்டில் உள்ள எல்லாரும் ஒரு ஒரு பெயராக சொல்ல, இறுதியில் பேப்பரில் எழுதி ஒரு பெயரை எடுப்போம் என முடிவுக்கு வருகிறார்கள்.

பாக்கியா பழனிச்சாமி வீட்டுக்கு போக, அங்கு அவரின் அக்காவும் இருக்கிறார். அவரிடம் நல்லா இருக்கீங்களா என்று கேட்க, நான் நல்லா இருக்கேன் என பழனி சொல்லுகிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement