• Jan 19 2025

விருது விழா முடிந்த பின் தனது வீட்டிலும் மாஸ் காட்டிய விஜய்! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் கால் பதித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் காணப்படும் நடிகர் விஜய், அரசியலிலும் இதுவரை செயல்பட்டு வந்த அரசியல் பிரபலங்களுக்கு ஆட்டம் காட்டும் வகையில் அதிரடியாக செயல்பட்டு வருகின்றார். 

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய ஒரு மாதத்திற்கு உள்ளேயே அவரது ரசிகர்கள் கோடிக்கணக்கில் அவரது கட்சி உறுப்பினர்களாக மாறினார்கள். இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறார் விஜய்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது விழா வைக்கப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் ஊக்கத்தொகைகளையும் வழங்கி கௌரவித்திருந்தார் விஜய்.


இந்த நிலையில், நேற்றைய தினம் இடம் பெற்ற விருது விழா நிகழ்ச்சி முடிந்ததற்கு பின்னர் விஜயை எப்படியாவது சந்திக்க வேண்டும் என அவரது வீட்டு வாசலுக்கு வெளியே ரசிகர்கள் காத்து இருந்துள்ளார்கள்.

இதனால் அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு வந்த விஜய், வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தனது ரசிகர்களை பார்த்து கையசைத்து நன்றியை தெரிவித்துள்ளார். தற்பொழுது குறித்த வீடியோ தீயாய் பரவி வருகின்றது.


Advertisement

Advertisement