எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜனனியை விரட்ட போட்ட பிளான் சொதப்பிய நிலையில், அடுத்த கட்டத்துக்கு செல்கின்றார் ஆதி குணசேகரன். அதன்படி ஜனனி வாங்கிய டிராக்கை புதிது போல் ரெடி பண்ணி வைத்திருப்பதை ஆதி குணசேகரன் கேள்விப்படுகின்றார்.
இதனால் அந்த வண்டியை எங்கிருந்து வாங்கினார்கள் என்று அறிவுக்கரசியிடம் விசாரிக்கின்றார். அவர் அந்த வண்டியை வாடகைக்கு வாங்கியதாகவும், அந்த வண்டி நம்பரையும் ஆதி குணசேகரிடம் சொல்கின்றார்.
இதனால் அந்த வண்டி ஓனருக்கு போன் போட்டு ஒழுங்கு மரியாதையா அந்த வண்டிய எடுத்துட்டு போகலாட்டி அதனை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என்று மிரட்டுகின்றார். இதனால் வண்டி உரிமையாளரும் பதறிப்போய் நமக்கு எதுக்கு வம்பு என ஜனனியை சந்தித்து அந்த வண்டியை எடுத்துக் கொள்வதாக சொல்லுகின்றார்.

இதை கேட்டு ஜனனி, நந்தினி, தர்ஷினி, சக்தி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். பின்னர் ஆதி குணசேகரிடம் ஃபோன் போட்டு பேசும் அறிவுக்கரசி, உடனே வந்து வண்டியை எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டான்.. சூப்பர் மாமா என்று சந்தோஷப்படுகிறார்.
இதை அடுத்து என்ன ஆனது? வண்டி இல்லாமல் எப்படி பிசினஸ் தொடங்க போகின்றார் ஜனனி? ஆதி குணசேகருக்கு பதிலடி கொடுப்பாரா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.
Listen News!