பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இன்னும் இந்த நிகழ்ச்சி நிறைவடைய நான்கு வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், இனி வரும் வாரங்களில் டபுள் எவிக்க்ஷன் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வியானாவும் ரம்யா ஜோவும் எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே பார்வதி கமருதீன் என இருவரும் மைக்கை பின்னால் தள்ளிவிட்டு பேசுவதும், மைக்கை கழட்டி வைத்துப் பேசுவதும், மைக்கை மறைத்து பேசுவதுமாக இருந்தார்கள். இதனால் முதல்முறையாக பிக் பாஸ் கடுமையாக எச்சரித்து இருந்தார்.

எனினும் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் செயல்பட்டு வந்ததால், ஒரு கட்டத்தில் பிக் பாஸ் இவர்களுடைய செயலினால் மொத்த ஹவுஸ்மேட்ஸையும் தண்டித்தார். இது சக போட்டியாளர்களுக்கு எரிச்சலையும் வெறுப்பையும் கொடுத்தது.
இவ்வாறு பார்வதியும் கமருதீனும் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்களுடைய காதலை நாளுக்கு நாள் வளர்த்து வருகின்றனர். எவ்வளவு தான் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் மீண்டும் இணைந்து விடுகின்றனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கமருதீன், பார்வதிக்கு சத்தியம் ஒன்றை செய்து கொடுத்துள்ளார். அதன்படி உன் அம்மா கிட்ட நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லிடு.. வெளிய போயிட்டு பாத்துக்கலாம்.. இப்போ இந்த கேம்ல போக்கஸ் பண்ணு.. ப்ராமிஸா நான் உன் கூட இருப்பேன்.. இங்கேயும் வெளியையும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு காதல் ஜோடி திருமணத்தில் முடிவதோடு, இந்த சீசனிலும் பார்வதி கமருதீன் தங்களுடைய காதலை உறுதி செய்து, திருமணத்தையும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!