• Dec 29 2025

அடேங்கப்பா..! மலேசியாவுக்கு அஜித்தை பார்க்க பறந்த STR.. இணையத்தை தெறிக்கவிட்ட போட்டோஸ்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார் ஒரு பக்கம் படங்கள், இன்னொரு பக்கம்  கார் பந்தயங்கள் என பிசியாக  காணப்படுகின்றார். தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேசிங்கில் கலந்து கொண்டுள்ளார்.  அங்கு இயக்குநர் சிவா மற்றும் ஏ.எல் விஜய் ஆகியோரும் அஜித்துடன் காணப்படுகின்றார்கள். 

அஜித்குமார் கார் ரேசிங் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதோடு இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து வருகிறார். எனவே இதனை ஒரு ஆவணப்படமாக  இயக்கி வருகின்றார் ஏ. எல் விஜய்.  

மறுபக்கம் அஜித்தை வைத்து ஒரு விளம்பரத்தையும் இயக்க உள்ளார் சிவா. அதற்காகத்தான் இருவரும் மலேசியாவில் அஜித் உடன் இருக்கின்றார்கள் என தகவல்கள் உலா வருகின்றன. 


இந்த நிலையில், மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டுள்ள அஜித்குமாரை  அங்கு சென்று சந்தித்துள்ளார் நடிகர் சிம்பு. தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சோசியல் மீடியாக்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. 


நேற்று காலை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு, அதற்குப் பிறகு  அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட  இடத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.  மிகுந்த நாட்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. 

ஆரம்ப காலகட்டங்களில் சிம்பு நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அஜித்தின் ரெபரன்ஸ் பயன்படுத்தி வந்தார். அவர் அஜித்தின் தீவிர ரசிகராக காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement