தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களில் மிகவும் பிரபலமான ஒருவராக டி. சிவா காணப்படுகின்றார். இவருடைய மகளின் திருமண வரவேற்பு விழா நேற்று சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் டி. சிவாவின் மகளான தக்ஷினாவிற்கும், சந்தீப் பிரபாகர்க்கும், கடந்த 27 ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதில் பல முக்கிய திரை உலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.
இதை தொடர்ந்து அவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி நேற்று எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அதற்காக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தயாரிப்பாளர் டி.சிவா மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து அவர்களை ஆசிர்வதித்துள்ளார்.
குறித்த திருமண விழாவிற்கு பட்டு வேட்டி மற்றும் சட்டை அணிந்து சென்றுள்ளார். விஜயின் இந்த பாரம்பரிய தமிழ் உடை ரசிகர்கள் மற்றும் விருந்தினர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதோடு, விஜயின் எளிமை, அவருடைய தோற்றம், அவருடைய ரியாக்ஷன் என்பவற்றை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!