• Apr 15 2026

அனிருத்துக்கு பட வாய்ப்பு எளிது.. நான் தேடியும் கிடைக்கல.! மிகுந்த வேதனையில் தமன்

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தமது தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் இசையால் ரசிகர்களை ஈர்த்த இசையமைப்பாளர் தமன், சமீபத்தில் தனிப்பட்ட பேட்டியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நட்சத்திர இசையமைப்பாளராக திகழ்ந்த தமன் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். 


இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தமன், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா குறித்து சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். 

அதாவது, "தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.” என்று கூறியுள்ளார் தமன். 


தமன் தனது கருத்துக்களில் தெலுங்கு சினிமா மற்றும் தமிழ் சினிமா இடையேயான வேறுபாடுகளைப் பற்றி விவரித்துள்ளார். 

இசையமைப்பாளர் தமன் கடந்த சில வருடங்களாக தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அகண்டா 2, தி ராஜா சாப் போன்ற படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதன் மூலம் அவர் தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்ல, தெலுங்கு ரசிகர்களையும் தனது இசையால் ஈர்த்துள்ளார். ஆனால், தமிழ் படங்களில் வாய்ப்பு குறைவாக இருப்பது அவருக்கு சிக்கலாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement