• Apr 02 2025

ஒரு கோடி ரூபாய் மேட்டர்.. தலைதெறிக்க ஓடும் முன்னணி நடிகைகள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக முன்னணி நடிகர் நடிகைகளிடம் ஒரு கோடி ரூபாய் பெற நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் தந்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் ரஜினிகாந்த், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் ஒரு பெரும் தொகையை தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தற்போது வெளியூர்களில் இருக்கும் இவர்கள் சென்னை வந்ததும் பணம் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் கட்டிடத்தை முடிக்க 40 கோடி ரூபாய் தேவைப்படுவதால் இன்னும் சில நடிகர்களிடமும் பிரபல நடிகைகளிடம் பணம் பெற நடிகர் சங்க நிர்வாகிகள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக த்ரிஷா, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட நடிகைகளிடம் ஒரு கோடி ரூபாய் குறித்த பேச்சை எடுத்தாலே அவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள் என்றும் அவ்வளவு பெரிய தொகை எங்களால் கொடுக்க முடியாது என்று மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவிற்கும் இந்த தொகை நன்கொடையாக கிடையாது என்பதும் வட்டி இல்லாமல் கடனாக கொடுப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா, நயன்தாரா சமந்தா ஆகியோர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு கொடுக்க மறுப்பதாகவும் இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து பணம் கொடுக்க முன் வந்துள்ளதாகவும், ஆனால் தங்களால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க முடியாது, எங்களால் முடிந்ததை கொடுக்கிறோம் என்று கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

இதுவரை 12 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில் மீதி பணத்தை வங்கியில் கடன் வாங்கலாமா என்ற ஆலோசனையில் நடிகர் சங்க நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement