• Jan 19 2025

தன்னுடைய 1000 சேலைகளை இன்ஸ்டாவில் விற்க முன்வந்த பிரபல நடிகை.. போட்டி போட்டு வாங்கும் பெண்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகை தன்னிடம் இருக்கும் ஆயிரம் சேலைகளை ஆன்லைனில் விற்க முன்வந்துள்ளதை அடுத்து அதை வாங்க பெண்கள் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல மலையாள நடிகையான நவ்யா நாயர் தமிழில்அழகிய தீயேஎன்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தங்கர்பச்சான் இயக்கியசிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிசேரன் நடித்தமாயக்கண்ணாடிமற்றும்ராமன் தேடிய சீதைஉள்பட சில தமிழ் படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை நவ்யா நாயர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னிடம் ஆயிரக்கணக்கான சேலைகள் இருப்பதாகவும் அதை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சேலைகளின் டிசைன் புகைப்படத்தை அவர் பதிவு செய்து அதன் விலையையும் குறிப்பிட்டுள்ளார். காஞ்சிபுரம் பட்டு சேலைகள், கைத்தறி சேலைகள், பனாரஸ் பட்டு சேலைகள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் 2500 முதல் 4000  ரூபாய் வரை அவர் விலையை நிர்ணயம் செய்து அனுப்புவதற்கான தொகை 500 ரூபாயும் அவர் சேர்ந்துள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள சேலைகளின் டிசைனை பார்த்து பல பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருவதாகவும் அவரிடமிருந்த சேலைகள் படிப்படியாக விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.



Advertisement

Advertisement