• Jun 12 2026

விடுதலை 2ம் பாகம் மூன்று மடங்கு ஜாஸ்தியா இருக்கும்.. அதகள அப்டேட் கொடுத்த சூரி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், முதன்முறையாக கதையின் நாயகனாக நடிகர் சூரி நடித்த படம் தான் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரியின் நடிப்பும் யாருமே  எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமாக இருந்தது.

இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் வரும் 'வழிநெடுக காட்டுமல்லி' என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது.


இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் விடுதலை முதலாம் பாகத்தை விட விடுதலை இரண்டாம் பாகம் மூன்று மடங்கு ஜாஸ்தியா இருக்கும் என தகவல் கொடுத்துள்ளார். 


அதன்படி விடுதலை முதலாம் பாகமே அபார வெற்றியை பெற்ற நிலையில் தற்போது,  நடிகர் சூரி அளித்துள்ள பேட்டி மேலும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement