தமிழ் திரையுலகில் சிறப்பாக நடித்து பல ரசிகர்களை தன்னகத்தே கொண்டவரே நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிகளவான படங்களை நடித்துள்ளார். அத்துடன் கீர்த்தி " கீதாஞ்சலி " என்ற மலையாளத்து திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
இவர் ரெமோ , தொடரி , சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இத்தகைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. அத்துடன் கீர்த்தி நடித்த படங்கள் செம ஹிட்டாக இருந்ததனால் அவருக்கு மேலும் அதிகமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அவர் இனி படங்களில் நடிக்க மாட்டாரோ? என்று அச்சத்தில் இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு போஸ்ட்டரை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி.
இவர் தான் நடித்த படத்தின் போஸ்டரையே தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தர்மராஜ் செட்டி இயக்கத்தில் உருவான "அக்கா " என்ற படத்தில் நடிகை கீர்த்தியும் ராதிகா ஆப்தேயும் நடித்துள்ளனர். அதில் கீர்த்தி செம கெத்தாகவும் மாஸாகவும் காணப்பட்டார்.
அந்தவகையில் அக்கா படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கீர்த்தி வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களைக் கவரப் போகின்றார் என நம்பப்படுகிறது. இந்த வருடம் கீர்த்தியின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கின்றது என்றே சொல்லுகிறார்கள் படக்குழு.
Listen News!