தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக காணப்படும் கே.பி சவுத்ரி ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளராக காணப்படுகிறார். இவர் கோவாவில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி சவுத்ரி அவருடைய இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தென்னிந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
44 வயதாகும் கே. பி சவுத்ரி கோவாவில் உள்ள அவருடைய வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர் .
காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவருடைய வீட்டிற்கு விரைந்ததாகவும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் நீண்ட நாட்களாக தங்கி இருந்த இவர், அங்கு கேளிக்கை விடுதி ஒன்றைத் திறந்ததாகவும் அதில் பல திரைப் பிரபலங்களுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே அவரை போலீசார் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!