• Feb 04 2025

விடாமுயற்சி படத்தின் புதிய மேக்கிங் வீடியோ ரிலீஸ்.. தல என்னமா ரிஸ்க் எடுத்துருக்காரு..

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள், டப்பிங் பணிகள் என்பன நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படம் பெப்ரவரி ஆறாம் திகதி திரையில் ரிலீஸ் ஆக உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவிலேயே காணப்படுகின்றது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் இளமையான தோற்றத்திலும் நடித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித், த்ரிஷா, அர்ஜுன் கூட்டணி அமைக்கும் அடுத்த படம் இதுவாகும். மங்காத்தா படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் இந்த படமும் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய மேக்கிங் வீடியோ ஒன்று நேற்றைய தினம் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றது.

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற 121 நாட்களில் அந்த படத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், படப்பிடிப்பு தளத்தில் பதிவு செய்யப்பட்ட சில முக்கிய காட்சிகளை உள்ளடக்கிய வீடியோவும் யூடியூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ...

Advertisement

Advertisement