• Jan 18 2025

அந்த நேரம் அது நடக்க இல்ல... விஜய்-அஜித் படத்துல நான் இருப்பேன்... நடிகர் ஜி.வி பிரகாஷ் ஓப்பன் டாக்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகரும் பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் நடந்த பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் அஜித் கூட்டணியில் நானும் உள்ளேன் என கூறியுள்ளார். இந்த தகவல் அடுத்த படத்திற்குரியதா என ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர்.  


நடிகர் ஜி.வி பிரகாஷிடம் தெறி படத்துக்கு அப்புறம் விஜய் கூட பேசிட்டிருக்கீங்களா? உங்க நடிப்பைப் பார்த்து விஜய் என்ன சொன்னார் என ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு இவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். 


எங்களுக்குள்ள இருக்கிறது அண்ணன்-தம்பி உறவுதான். அது இப்போவரைக்கும் தொடர்ந்துட்டுதான் இருக்கு. அப்பப்போ கால் பண்ணிப் பேசுவார். நான் தேசிய விருது வாங்கினப்போ எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொன்னார். என் நடிப்பைப் பத்தி ‘தெறி’ படத்தோட மேடையிலேயே ஒப்பனா  பாராட்டிப் பேசியிருப்பார். 


அவர்கூட வொர்க் பண்ணுறது எப்போதுமே ஸ்பெஷல்தான். ‘தெறி’ படத்துக்கு அப்புறம் நாங்க சேர்ந்து ஒர்க் பண்ண வேண்டியதா இருந்துச்சு. அவரும் வெற்றிமாறனும் சேருகிற படத்துக்கு நான்தான் இசைன்னு முடிவாகி இருந்துச்சு. அது அந்தச் சமயம் நடக்கல. அதே மாதிரி சுதா கொங்கரா இயக்கத்துல அவர் நடிக்கிறதாக இருந்தது. அந்தப் படத்துக்கும் நான்தான் இசைன்னு பேசியிருந்தோம். அதுவும் அப்போ நடக்கலை. இந்தக் கூட்டணியில் எப்போ படம் வந்தாலும் அதுல நான் இருப்பேன் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement