• May 20 2024

அஜித்துடன் நைட் பார்ட்டிக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம்! செம்ம ஸ்டைலிஷான போட்டோ வைரல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

குறித்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் அசர்பைஜானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அத்துடன் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.


இந்நிலையில், விடாமுயற்சியில் நடித்து வரும் இரண்டு பிரபலங்கள் அஜித்துடன் நைட் பார்ட்டிக்குச் சென்ற போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

அதேவேளை, விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் நடிப்பது மட்டும் உறுதிப்படாத தகவலாக இருந்தநிலையில், தற்போது அதுவும் உறுதி ஆகிவிட்டது.

அதன்படி, அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது அஜித்துடன் அர்ஜுன், ஆரவ் இருவரும் ஒன்றாக ஹோட்டல் சென்றுள்ளனர். 

அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட  போட்டோவில் மூவரும் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளனர். மங்காத்தா படத்துக்குப் பின்னர் அஜித், அர்ஜுன் கூட்டணி விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement