சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முக்கிய உறுப்பினருமான அர்ச்சனா கல்பாத்தி, தமிழ் சினிமாவின் வளர்ச்சி மற்றும் புதிய திறமைகளின் முன்னேற்றம் பற்றிய கருத்துகளை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
அவருடைய பார்வையில், சின்ன படங்கள் மூலமே புதிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றது என்றார். அத்துடன் “சின்ன படங்கள் எதுவும் இல்லாமல் நம்மைச்சுற்றி இருக்கும் புதிய திறமைகளை கண்டுபிடிக்க முடியாது என்றார். மேலும் ஒரு இயக்குநர் அல்லது நடிகர் வளர சின்ன படங்களே முதல் அத்தியாயமாக இருக்கும்” என அவர் கூறினார்.
இன்று ஸ்ட்ரீமிங் தளங்கள் பெரும் வளர்ச்சி கண்டாலும் ஒரு நடிகர் ஸ்டாராகுவது திரையரங்கில் தான் நடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “ஒரு ஸ்டார் என்ற நிலையில் வருவதற்கு, அவரது படம் தியேட்டரில் வெற்றி பெற வேண்டும். அதாவது, 500 பேர் ஒரே நேரத்தில் விசில் அடித்து உற்சாகமாக பார்க்கும் சூழ்நிலையில் தான் ஸ்டார் உருவாகிறார் என்றதுடன் ஒரு நடிகர் OTTயிலோ அல்லது டீவியிலோ ஸ்டார் ஆக முடியாது” என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
அதேபோல, மக்கள் புதுமுகங்களை உடனடியாக ஏற்க மாட்டார்கள் என்பதும் அர்ச்சனா கல்பாத்தியின் கருத்தாகும். மேலும் தமிழ் சினிமா வளர, புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சனா கல்பாத்தியின் இந்த கருத்துக்கள் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு முக்கியமான ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. புதிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்களை நிரூபிக்க சிறிய படங்களை ஒரு பெரிய தளமாக பார்க்க வேண்டும் என்பதற்கான ஒரு முக்கிய செய்தியாகவும் இது விளங்குகிறது.
Listen News!