• Nov 14 2025

அஜித் சாரைப் பார்த்த நொடியிலேயே புரிந்தது… – நடிகர் சூரியின் மனம் தொடும் பதிவு வைரல்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் எப்போதும் ரசிகர்களின் இதயத்தை கவரும் நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் தனது துறைகளில் தனித்துவமான சாதனைகளை நிகழ்த்தியவர். அதேபோல தான் நடிகர் சூரியும் தனது சிறப்பான நடிப்பால் பல ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். 


இவர்களில் ஒருவர் எளிமையாலும் தன்னம்பிக்கையாலும் மக்கள் மத்தியில் “தல” என அழைக்கப்படுபவர்; மற்றொருவர் தனது நகைச்சுவை திறமையால், தற்போது முக்கிய கதாநாயகனாக வளர்ந்து வருகின்றார். 

இவர்களிருவரும் அண்மையில் சந்தித்த புகைப்படங்களை நடிகர் சூரி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

 X தளத்தில் சூரி பகிர்ந்த பதிவில், அவர் அஜித் குமாரை சந்தித்த அனுபவத்தை மிகுந்த மரியாதையுடனும் உணர்ச்சியுடனும் வெளிப்படுத்தியுள்ளார்.


அவர் குறிப்பிட்டதாவது, “அஜித் சாரைப் பார்த்த நொடியிலேயே புரிந்தது… உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதில்லை. அது தினமும் உழைப்பாலும், மனவலியாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடனான உரையாடல் அமைதியாக இருந்தாலும், அதில் ஆழமான அர்த்தம் இருந்தது.” என்றார். 

இந்த பதிவு வெளிவந்தவுடன், ரசிகர்கள் பலரும் சூரியின் வார்த்தைகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் அஜித்தை சந்தித்த நேரம் தனக்குள் எழுந்த உணர்வைத் தான் சூரி தனது பதிவில் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement