தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கும் திறமையான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது புதிய அவதாரத்தில் திரையில் வரவிருக்கிறார். அவர் நடித்துள்ள புதிய படம் “ரிவால்வர் ரீட்டா” (Revolver Rita), ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை இயக்குநர் சந்துரு இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ட்ரெய்லரில் அவர் ஒரு வீராங்கனையாக, அதிரடி மற்றும் சாகச காட்சிகளில் கலக்கி நடித்திருப்பது தெளிவாக தெரிகிறது.
பலரும் கீர்த்தி இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்ட ஒன்று எனக் கூறி வருகின்றனர். அத்துடன், ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே அதிரடி காட்சிகளால் ரசிகர்களைக் கவர்கிறது.
Listen News!