தமிழ் திரையுலகில் ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஒரு கனவு கூட்டணி தற்போது நனவாகி வருகிறது. நடிகர் சிலம்பரசனும் (சிம்பு), இயக்குநர் வெற்றிமாறனும் இணையும் புதிய படம் “அரசன்” பற்றிய தகவல் வெளியாகியவுடன், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.

ஏனெனில், வெற்றிமாறனின் நுணுக்கமான திரைக்கதை மற்றும் சிம்புவின் அதிரடி நடிப்பு இவை இரண்டும் இணையும் போது, ரசிகர்கள் நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தைக் காணப்போகிறார்கள் என்பது உறுதி.
அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, “அரசன்” படப்பிடிப்பு நவம்பர் 24, 2025 முதல் தொடங்கவிருக்கிறது. படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
படம் முழுவதும் அரசியல் பின்னணியுடன் கூடிய தீவிர சமூக திரில்லராக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிமாறன் தன் படங்களில் கதாபாத்திரங்களை மிக நுணுக்கமாக வடிவமைப்பவர். “அரசன்” படத்தில் சிம்புவுக்காக உருவாக்கப்பட்ட ரோல் மிகவும் வேறுபட்டதாகவும், அவரின் கேரியரில் புதிய அடையாளத்தை உருவாக்கக்கூடியதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அரசன் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதாவது, “அரசன் படத்தில் நடிகர் கவினை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னேன். ஆனால் பின்னர் திரைக்கதை மாற்றப்பட்டதால் அந்த ரோல் மாற்றம் செய்ய வேண்டி வந்தது.” எனக் கூறியிருந்தார்.
Listen News!