திருப்பதிக்கு பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் செய்வது நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் நடந்த இந்த செயலுக்கு பவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், லட்டு விவகாரத்தில் கேலி செய்யும் பல்வேறு போலி மதச்சார்பற்றவாதிகளை கடுமையாக சாடினார். சமீபத்தில் திருப்பதி லட்டுவை கேலி செய்ய வேண்டாம் என நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரகாஷ் ராஜ் மற்றும் பொன்னவொலு சுதாகரின் கருத்துகளை அவர் விமர்சித்தார்.
இந்நிலையில் கார்த்தியின் சத்யம் சுந்தரம் படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது, தொகுப்பாளர் கார்த்தியிடம், “லட்டு காவலா நயனா” என்று பலமுறை கேட்டார். அதற்கு கார்த்தி, “இப்போ லட்டுவை ஈடுபடுத்த வேண்டாம். லட்டு ஒரு முக்கியமான தலைப்பு என்று கூறியுள்ளார். இதனை விமர்சித்தே பவன் கல்யாண் பேசியிருப்பார். இதற்க்காக தான் வருந்துவதாக நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!