• Oct 13 2026

சூர்யாவின் 45வது படத்தின் சுடசுட அப்டேட் இதோ! சூப்பர் கூட்டணியுடன் நடிகர் சூர்யா!

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா, தற்போது 'கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.இந்த நிலையில், சூர்யாவின் 45வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


சூர்யாவின் 45வது படத்தினை ஆர். ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சூர்யா நடித்த ’24’ திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த நிலையில், தற்போது அவருடைய 45 வது படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சூர்யா, ஆர். ஜே. பாலாஜி, ஏ. ஆர். ரகுமான், மற்றும் ட்ரீம் வாரியார் நிறுவனம் எனும் கூட்டணி சூப்பராக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement